Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் இலங்கையில் ஒப்பந்தம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், இன்று (2012-05-30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாடு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.

2011 ஆம் ஆண்டின் இரு தரப்பு வர்த்தக வேகம் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.3 மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் நாம் இன்று இங்கு வந்துள்ளதுடன், நானும்அமைச்சர றசாத் பதியுதீனும் சாட்சிகளாக நின்று இரு தரப்பு புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளோம். இந்த உடன்படிக்கை மூலம் இலங்கை வர்த்தகர்கள் பலமான பாதையினை நோக்கி செல்லும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பது எனது எதிர்பாரப்பாகும்.தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் இதற்கு உகந்த்தாகவும் காணப்படுகின்றது என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

Exit mobile version