தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கூட்டத்தில்
கேள்வி நேரம் முடிந்ததும் கருணாநிதி விதி 110-ன் கீழ் அவர் படித்த அறிக்கை: கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக ஏப்ரல் 17-ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பற்றி ஏப்ரல் 19-ம் தேதி சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. தமிழகம் வருவது குறித்து பார்வதியம்மாளிடமிருந்தோ, அவருக்கு துணைபுரிய விரும்புவபர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு கடிதமோ, தகவலோ வரவில்லை. இந்தப் பயணம் குறித்து மத்திய அரசுக்கும், அவருக்கும் இடையேதான் செய்தித் தொடர்பு உள்ளது. தமிழக அரசுக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு எழுத மாநில அரசு தயாராக உள்ளது என்று சட்டப் பேரவையில் நான் தெரிவித்தேன். சிகிச்சைக்காக கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வர, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யுமாறு பார்வதியம்மாள் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதம் ஏப்ரல் 30-ம் தேதி மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது. அதன்படி, சிகிச்சைக்காக பார்வதியம்மாள் தமிழகம் வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அனுமதிக்கலாம் என்று மத்திய உள்துறைச் செயலாளருக்கு மே 1-ம் தேதி தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இந்த விவரங்களை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 3-ம் தேதி பேரவையில் அறிவித்தார். மே 3, 4 தேதிகளில் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்து அவர்களின் உதவியை நாடினேன். தினமும் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நல்ல பதில் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அதனைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு வர அனுமதிக்கலாம் என்று மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு மே 7-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் தமிழக அரசுக்கும் வந்துள்ளது. சிகிச்சைக்காக
மட்டுமே அவர் தமிழகம் வர வேண்டும். மருத்துவமனையைத் தவிர வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் அதற்கான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். அரசியல் கட்சியினர், குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு நண்பர்களாக இருப்பவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதியம்மாளைத் தொடர்பு கொண்டு 6 மாத காலத்துக்கு விசா வழங்கலாம் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு எந்தவிதமான குந்தகமும் இல்லாமல் மத்திய அரசினால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . சாதாரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில் முடிவு எடுப்பதற்கு சில காலம் பிடிக்கும் என்றாலும், அந்த அம்மையாரின் உடல்நிலை கருதி மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்குமேல் மலேசியாவில் உள்ள அந்த அம்மையாரின் முடிவுக்கு இணங்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்‘ என்றார் முதல்வர் கருணாநிதி. நிராகரித்தார் பார்வதியம்மாள்…
அ
ரசு சொல்கிற மருத்துவமனையிலேயெ சிகிச்சை, அரசியல்வாதிகளோ, தடை செய்யபப்ட்ட அமைப்பின் ஆதர்வளார்களோ வந்து பார்க்கக் கூடாது, ஒரு மாத சிகிச்சைக்குப் பின் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்று விட வேண்டும் என்கிற நிபந்தனைகள் எல்லாம் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு விதித்ததால் இறுதிக்காலத்தில் இந்த நிபந்தனைகளுடன் கூடிய தமிழக பயணம் தனக்கோ, தனது பிள்ளைகளுக்கோ எவ்விதத்திலும் மன நிம்மதியைத் தரப்போவதில்லை என்பதைத் தெரிந்த பார்வதியம்மாள் வேறு வழியில்லாமல் கொழும்புவுக்கே திரும்பிச் சென்று விட்டார். பார்வதியம்மாள் விவாகரத்தில் இந்திய மத்திய அரசின் இரக்கமற்ற போக்கை விட கருணாநிதின் பழிவாங்கும் வன்மமான போக்கு இப்போது வெளிப்பட்டிருக்கிறது. எண்பது வயதுக்கும் மேலாகிவிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முதிய பெண்ணிடம் கருணாநிதி நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது. நள்ளிரவில் தனது வீட்டிற்குள் புகுந்து போலீஸ் கைது செய்ய முற்பட்ட போது அய்யோ… அம்மா என்று டப்பிங் பேசி தனக்கு அநீதி இழைக்கபப்ட்டு விட்டதாக கத்தி கூப்பாடு போட்ட கருணாநிதி. இன்று பார்வதியம்மாளிடம் நடந்து கொண்ட விதத்தை நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முசிறியில் சிகிச்சையளிப்பதைக் கூட பரிசீலிக்காத நிலையில் பார்வதியம்மாள் தமிழகம் வருவது செம்மொழி மாநாட்டில் இதை வைத்து தான் ஒரு விளையாட்டை நடத்த மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது.