Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமானது

chavez+funeralவெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேசின் மரண ஊர்வலம் கரகாசில் ஆரம்பமாகியது. மக்கள் பெரு வெள்ளமாகக் காட்சிதரும் இந்த நிகழ்வில் லத்தீன் அமரிக்க நாடுகளின் அனைத்து ஆட்சியாளர்களும் கலந்துகொண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சாவேசின் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியை அண்மிக்க முடியாத அளவிற்கு மக்கள் வெள்ளம் அலைமோதியது. இரண்டு வருடம் புற்று நோயுடன் போராடிய சாவேசின் மரணம் வெனிசூலாவை அதிர்ச்சியில் ஆழ்தியிருந்தது. கியூபாவிலிருந்து ரவுல் கஸ்ரோவும், ஈரான் அதிபர் மொகமட் அகமதினிஜாட் போலிவியாவிலிருன்கு ஈவோ மோரலஸ் ஆகியோர் உட்பட 30 நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அமரிக்க ராஜதந்திரிகள் உள்ளடங்கிய குழுவும் பிரித்தானியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் அந்த நாட்டின் தூதுவர் கத்தரீன் நெட்லெட்டன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டது.சாவேசின் உடல் கண்ணாடிப் பேழையில் பாதுகாத்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version