மாணவன் கபில்னாத் கொலை குறித்தும் இந்தக் கட்சியின் ஏனையநடவடிக்கைகள் குறித்தும் அதிர்ப்தி கொண்டிருந்த மக்கள் அலுவலகத்துள் புகுந்து சேதப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. தவிர, அரசின் ஏனைய துணை இராணுவக் குழுக்களும் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படக் கூடைய சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பெரிய அளவில் அவர்களது அலுவலகத்திற்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த ஈபிடிபியினர் தப்பி ஓடியுள்ளனர் என இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.