பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலை அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ திட்டமிட்டு நடத்தியதாக கலாநிதி போல் கிரேக் ரொபெர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ரீகன் நிர்வாகத்தில் அமெரிக்க திறைசேரியின் உதவிச் செயலாளராகக் கடமையாற்றிய கலாநிதி ரொபேர்ட்ஸ் இன்று வால் ஸ்ரிட் ஜேர்னலின் இணை ஆசிரியர்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் பிரான்சின் பொருளாதாரம் பாரிய பின்னடவைச் சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத் தடையை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று கடந்தவாரம் பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் பிரான்ஸ் உட்பட அமெரிக்கக் கைப்பொம்மைகளான நேட்டோ நாடுகள் பெரும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டுக் கொள்ளையையும் ஏற்கமுடியாத நிலையில் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இதனால் பிரன்ஸ் உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவதற்கு சீ.ஐ.ஏ திட்டம்ட்டுள்ளதன் ஒரு பகுதியே சார்லி எப்டோ தாக்குதல் என அவர் தனது கட்டுரையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தி அதன் கீழ் ஐரோப்பிய நாடுகளை அமெரிக்காவின் தலைமையில் இணைத்துகொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் சி.ஐ.ஏ ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு கம்யூனிஸ்டுக்களின் மீது பழிபோட்டுவிட்டு கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய நாடுகளை இணைத்துக்கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.