தாக்குதல் முடிந்ததும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் கொலையாளிகள் ஏறித் தப்பிச் செல்லும் காட்சி மட்டும் ஊடகங்களில் வெளியாகின. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் சார்லி எப்டோ இன் தலைமை ஆசிரியரும் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளைப் பிரஞ்சுப் போலிஸ் அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறுகிறது. சகோதரர்களான இருவரும் மற்றும் ஒருவரும் இணைந்தே இத் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்கிறது. இந்த மூவரும் இஸ்லாமியர்கள்.
பல தடவைகள் இஸ்லாமியப் பயங்கரவாதம் தொடர்பாகக் கேலிச் சித்திரங்களை வெளியிடும் சார்லி எப்டோ என்ற வாரச் சஞ்சிகை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானது.
பிரான்சில் செல்வாக்கிழந்து சேட்மிழுக்கும் ஜனாதிபதி பிரன்சுவா ஒல்லோந் நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும் என்றார்.
சார்லி எப்டொ பிரஞ்சு அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரஞ்சு நிறவாதத்திற்கு எதிராகவும், அனைத்து மதங்களையும் கேலி செய்தும் பல்வேறு கேலிச் சித்திரங்களை வரைந்துள்ளது. சமூக ஜனநாயக இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட சார்லி எப்டோ, 1982 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு பின்னர் 1992 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. வார இதழின் அலுவலகத்தில் சாட்சியின்றி நடைபெற்ற படுகொலை தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிவராமலே அழிந்து போகலாம்.