தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என பிரதம மந்திரி நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரியாக பதவியேற்ற பின், முதன் முறையாக டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வருகை தந்த மோடி இவ்வாறு கூறினார். வெளியுறவுக் கொள்கை தொடர்பாக தாம் எடுத்த முதல் முடிவு, இந்தியாவின் வலிமை குறித்து உலகத்துக்கு பறைசாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்து அதற்கான மரியாதையையும், அந்தஸ்தையும் அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டு மக்கள் தமது அரசு மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமது அரசு பாடுபடும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் உழைப்பால் அவற்றின் நலன்களுக்காக அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட நரேந்திர மோடி சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தமைக்கும் அதே நிறுவனங்களின் நலனுக்காக என்பதே உண்மை, தவிர, இந்த பெரு வர்த்தக நிறுவனங்களின் உழைப்பே இனக்கொலையாளி மோடியைப் பிரதமராக்கியது எனினும் பாஜக தொண்டர்களின் கடும் உழைப்பால்தான் பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.