சார்க் : இன்று வெளிவிவகார அமைச்சர்கள் அமர்வு,நேபாளப் பிரதமரும் வருகிறார்.

இலங்கையில்,நடைபெறும் 15 வது சார்க் மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் அமர்வு இன்று தொடக்கம் இரு நாட்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது
இலங்கையில் நடைபெறும் சார்மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்தின் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா இன்று இலங்கை வருகைதரவுள்ளதாக நேபாள தூதரகம் செய்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமருடன் நேபாள உயர் அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய 35 பேரைக் கொண்ட குழுவொன்றும் இலங்கை வருவதாகவும் இம்முறை சார்க் உச்சி மாநாட்டின் செயலாளர்களுக்கான கலந்துறையாடலில் நேபாளக் குழுவுக்கு நேபாள வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் கயான் சந்தரா தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.