சிறீ சிறீ ரவிசங்கரின் ஆர்ட் ஒப் லிவிங் (வாழும் கலை) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் மாநாடு, இந்தியாவின் பங்களுர் நகரில் -08.02.14- நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சிராந்தி , ‘இலங்கையில் நடைமுறையிலுள்ள மகளிர் கொள்கைகளுக்கு அமைய பெண்களுக்கான அரசியல் மற்றும் பொது உரிமைகள், கல்வி, பொருளாதார நலன்கள், பாதுகாப்பு மற்றும் போசனை, சமூக சீர்கேடுகளிலிருந்தான பாதுகாப்பு, சித்திரவதைகளிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உள்ளிட்ட பல உரிமைகளை இலங்கைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் கண்ணீர் வியாபாரத்தில் வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள், உணர்ச்சி
பொங்கும் உணர்வாளர்கள் மட்டுமல்ல சாமிகள் கூடப் பிழைப்பு நடத்துகின்றன என்பதற்கு சிறீ சிறீ ஒரு குறியீடு.
பாசிஸ்டுக்களும் கிரிமினல்களும் ஆட்சிசெய்யும் நாட்டில் பெண்களுக்கு உரிமை உள்ளது என்று பேசும் சிராந்தி ராஜபக்ச 1965 ஆம் ஆண்டில் தனது இளைமைக் காலத்திலேயே பெண்களின் உரிமையை விற்பனைப்பண்டமாக்கியவர். உலக அழகிப் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சிராந்தி ராஜபக்ச ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த குற்றச் செயல்களுக்குப் பேர்போன, குஜராத் மோடியின் அரசியல் சாயலுள்ள மகிந்த ராஜபக்சவைத் திருமணம் செய்துகொண்டார்.
சிராந்தி, ரவிஷங்கர், ஜெயலலிதா போன்றவர்கள் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகள் இவை.