1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அடியாட்களிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சாதி ரீதியான மோதல் தீவிரமடைந்தது. தேவர் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்களால் முத்துராமலிங்கத் தேவர் பிழைப்பு வாதத்திற்காகக் கடவுளாக்கப்பட்டார்.
உலகில் இந்தியாவில் மட்டும் தான் மனிதனை பிறப்பை முன்வைத்துக் கூறு போடும் சாதீயம் கோலோச்சுகிறது. இவர்கள் இந்தியர்கள் என்று மார்தட்டிக்கொள்வதற்குக் கூட அவமானப்படுவதில்லை.