இன்று காலையில் பெண் ஊடகவியலாளரான நிருபமா பதாக் ஜார்கண்ட் மாநிலத்தின் கொடேர்மா மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் நிருபமாவின் உடலைக் கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிருபமா தூக்கிட்டு மூச்சுக்குழாய் உடைந்து சாகவில்லை என்று செயற்க்கையான மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டு கொலை செய்யபப்ட்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. ஆதிக்க சாதியைச் சார்ந்த நிருபமா வேறு ஒரு ஜாதியில் உள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும் இந்த காதலுக்கு வீட்டினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு வந்த நிருபமாவை அவரது தயாரும், சகோதர்களும், தகப்பானாரும் சேர்ந்து தலையணையால் மூச்சை அழுத்திக் கொன்றிருப்பதும் அதிர்ச்சிச் செய்திகளாக வெளி வந்திருக்கிறது. இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நிருபமாவைக் கொன்றவர்களை போலீசார் கைது செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. நிருபமா டில்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில வர்த்தக இதழ் ஒன்றில் நிருபராக பணிபுரிகிறார்.