சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
இனியொரு...
சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூகநீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் கே.பாலு தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.
அவர் தாக்கல் செய்த மனு விவரம்:
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. கடந்த 6 முறையும் மக்கள் தொகை கணக் கெடுப்பில் சாதிவாரியான தகவல்கள் பதிவு செய்யப் படவில்லை.
இதன் காரணமாக, பிற் படுத்தப்பட்டோர் நலனுக் காக அமைக்கப்பட்ட 3 தேசிய கமிஷனர்களும் பிற் படுத்தப்பட்ட சாதியின ரைக் கண்டறிய முடிய வில்லை.
அரசியல், சமூக, பொரு ளாதார ரீதியாக மக்கள் எவ்வாறு பின்தங்கியுள்ள னர் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு திட்டங் களைத் தீட்டுவதற்கு இந்த புள்ளிவிவரங்கள் அவசிய மாகின்றன.
ஒரு குறிப்பிட்ட சாதி யில் படித்தவர்கள், டாக்டர் கள், அரசு ஊழியர்கள் உள் ளிட்டோரின் எண்ணிக் கையை அறியாமல், அந்த சாதியினர் பின்தங்கியுள்ள னரா, இல்லையா என் பதைக் கண்டறிய முடியாது.
அதேபோல், இந்தத் தக வல்கள் இல்லாமல் முன்னே றிய சாதியினரைப் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கவும் முடியாது.
சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 24.10.08 ல் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப் படவில்லை.
இதுதொடர்பாக, மக் கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர், உள்துறை அமைச் சகத்திடம் மனு அளித் தோம். ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.
பழங்குடியினர், தாழ்த் தப்பட்டோரின் விவரங்கள் சாதிவாரியாக கணக்கெடுக் கப்படுகிறது. அதேபோல, இதர பிற்படுத்தப்பட்டோ ரின் விவரங்களும் சாதிவாரி யாகக் கணக்கெடுக்க உத்தர விட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், “இந்த விவகா ரம் தொடர்பாக மத்திய அரசின் சமூக நீதித்துறை யின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத் துறையின் உத்தரவு கிடைத்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித் தது.
“சாதிவாரியான கணக் கெடுப்பு நடத்தக் கோரி வழக்கறிஞர் கே.பாலு அளித்த மனுவை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்து 8 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது உத்தர வில் தெரிவித்துள்ளனர்.