Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சாணக்கியர் சம்பந்தரே புரிந்துகொள்ள முடியாத வரவு செலவுத்திட்டம்

தமிழ்ப் பேசும் மக்களுக்கு சிங்கள மக்களுக்கும் எதிரான பல்தேசிய நிறுவனங்களின் முதலீட்டுச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டு தாயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவித் திட்டடத்தை சமூகப்பற்றுள்ள எவரும் உடனடியாகவே நிராகரிப்பாகள்.
கொழும்பு பங்கு சந்தையில் பதிவு செய்யும் பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்ற பெரு நிறுவனங்களுகுச் சேவையாற்றும் நாட்டை அடகுவைக்கும் வரவு செலவித் திட்டத்தை மக்கள் குறித்து அக்கறையுள்ள யாரும் நிராகரிப்பார்கள்.
இந்த நிலையில், வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து உடனே தெரிவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை. குறிப்பாக இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பில் குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்தும் வகையிலான திட்டங்கள் கிடையாது. எனினும், வடக்கு தேர்தல்கள் பற்றி வரவு-செலவு திட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறும் விவாதங்களின் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version