Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சாட்சியமளித்தவர்களுக்கு ஆபத்து : வன்னியில் மீண்டும் கைதுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் தமிழ் மக்கள் சாட்சியமளித்த போது தெரிவிக்கப்பட்ட தகவல்கள் உண்மையற்றவையென இராணுவப் போச்சாளர் மறுத்துள்ளார்.
வட பகுதியில் ஆணைக்குழு நடாத்திய அமர்வுகளில் சாடசியமளித்த பொதுமக்கள், கைது செய்த அல்லது சரணடைந்த நிலையில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவினர்கள் பற்றிய தகவல்களை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தனர்.

அத்துடன் பொது மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றியும் விவரித்திருந்தனர். இதனை இராணுவப்பேச்சாளர் உண்மையற்ற தகவல்கள் என மறுத்துள்ளார்.

தாமும் கொல்லப்படலாம் என சந்தேகமிருந்தும் அவலங்களுக்கு மத்தியில் தமது வாக்குமூலத்தை வழங்கிய மக்களின் பாதுகாப்புக் குறித்து அரச துணைக்குழுக்கள் குரல் கொடுத்தாகத் தெரியவில்லை.

இராணுவப் பேச்சாளர் வட பகுதி தமிழ் மக்கள் கூறிய தகவல்களை மறுத்துள்ள நிலையில் சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா (23.09.2010 வியாழக்கிழமை) வேண்டியிருக்கிறார்.
இந்திய அரசின் தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாத அறிக்கைக் கட்சியாக மட்டுமே உயிர்வாழ்வதால் இவர்களின் அறிக்கைகள் பலனளிக்கப்போவதில்லை.

இதே வேளை வன்னியில் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

23.09.2010 வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமரும் ஈழக் கனவை வகைவிடாதோர் சர்வதேச மட்டத்தில் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிக்கத்திட்டமிடுகின்றனர்.

கொழும்பு உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகிளல் தற்போதும ஆயதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

தகவல் : விஜய்

Exit mobile version