கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் திருகோணமலையிலிருந்து 110 முறைப்பாடுகளும், வவுனியாவிலிருந்து 90 முறைப்பாடுகளும், மன்னாரிலிருந்து 40 முறைப்பாடுகளும், யாழ்ப்பாணத்திலிருந்து 30 முறைப்பாடுகளும், கிளிநொச்சியிலிருந்து 20 முறைப்பாடுகளும், கொழும்பிலிருந்து 10 முறைப்பாடுகளும், வெவ்வேறு இடங்களிலிருந்து இன்னும் பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக இலங்கை, குற்றத் தடுப்பு பிரிவுக்கும், வெலிக்கடை சிறைச்சாலைக்கும் தமது அமைப்பு கடிதங்களை அனுப்பியதாகவும், தாங்கள் கொடுத்த பெயர், ஊர் விபரங்களோடு எவரும் தம் வசம் இல்லையென அவர்கள் தெரிவித்ததாகவும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு மேலும் தெரிவிக்கிறது.
தமது பிள்ளைகளை தமது கண் முன்னாலேயே இராணுவம் கொண்டு சென்றதாக காணாமல் போயுள்ளவர்களின் பெற்றோரும் உறவினரும் தெரிவிப்பதை ‘நாம் இலங்கையர்’ அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.