58 ஆவது படைப்பிரிவின் தளபதியான சில்வா இனவழிப்புக் களத்தில் இறுதிவரை ஈடுபட்டவர். வெள்ள முள்ளிவாய்க்கால், கரைய முள்ளிவாய்க்கால், பின்னதாக நந்திக் கடல்வரை சாரிசாரியாக மனிதர்கள் கொல்லப்படக் கரணமானவர்.
பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக உரையாற்றுவதற்கு அமரிக்கக் கடற்படை இவரை நியூயோர்க்கின் சென் குவான்டீகோ பல்கலைக்கழகத்தில் விசேட சொற்பொழிவு ஆற்ற அழைத்திருந்தது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதனையே சவேந்திர குறித்த உரையில் வலியுறுத்தியிருந்தார்..
சவேந்திர சில்வாவை அழைப்பதற்கு முன்னர் தம்மிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமரிக்கத் தூதரகம் குறைபட்டுக்கொண்டது.