Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சவீந்திர சில்வா நியமனம் : அப்பட்டமாகப் பொய் கூறும் ஐ.நா

ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி,

“மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல.

அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்தன“ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளதும் முழுமையான கட்டுப்பாட்டினுள் இயங்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம். வளங்களைக் கொள்ளையிடுவதற்காக லிபியாவை ஆக்கிரமிப்பதற்கு பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாளில் முடிவெடுத்த்து செயற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் போர்க்குற்றவாளியையும் இனக் கொலையாளியையும் அமைதிப்படையின் உயர் பதவியில் நியமிப்பதைத்  தடுத்து நிறுத்த முடியாது என்பது கேலிக்குரிய பொய்.

Exit mobile version