Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சல்மான் கான் சென்ற வாகனம் மோதிய சிறுவர்கள் இன்னும் ஆபத்தான நிலையில்

salman-khan_namal_rajapaksaஇனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாகப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சல்மான் கான் என்ற வட இந்திய சினிமாக் கூத்தாடி 29ம் திகதி இலங்கையிலிருந்து திடீரென வெளியேறு நாடுதிரும்பியமை தெரிந்ததே. தென்னிந்தியாவில் ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வை.கோ போன்ற தமிழ் இனவாதிகள் சல்மான் கானைத் துரோகி என்று கொக்கரித்து ஏனையோரைத் தியாகியாக்கியமை தெரிந்ததே. சல்மான் கான் வட இந்தியாவில் இருந்தபடியே தமிழீழம் வேண்டும் என ஒரு வார்த்தை கூறியிருந்தாலே போதும், வை.கோவின் தியாகிப் பட்டியலில் இணைந்திருப்பார்.

சல்மான் கான் இலங்கையை விட்டு வெளியேறியமைக்கு வை.கோ போன்றவர்களின் தமிழ் இனவாதக் கருத்துக்களே காரணம் என வை.கோ வின் விசில் இணையங்கள் பரப்புரை செய்தன.

சல்மான் கான் பிரசாரத்திற்காகச் சென்ற வாகனம் மோதி இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த பின்னர் வாகனத்தைச் சூழந்து மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதனால் அச்சமடைந்த சல்மான் குழு உடனடியக நாட்டைவிட்டு வெளியேறிதாகத் தெரியவருகிறது. கொழும்பில் வெலிகடைப் பகுதிக்கு அருகாமையிலுள்ள மாமரச் சந்தியில் சல்மானின் வாகனம் பயணம் செய்த போதே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இத்தகவலை வெலைக்கடைப் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக சிறீ லங்கா மிரர் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கு உள்ளான சிறுவர்கள் இன்னும் ஆபத்தான நிலையிலேயே உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version