Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச விசாரணை எல்லாம் சாத்தியமில்லை : இனக்கொலை அரசுகளாக மாறும் பொதுநல்வாய நாடுகள்

kamalesh-sharmaஇந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தை நடத்தி தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியை ஒரு சில இரவுகளுக்குள் அழித்துத் துவம்சம் செய்த சிறீ லங்கா இனக்கொலை அரசை பொது நலவாய நாடுகளின் தற்போதைய செயலாளர் கமலேஷ் சர்மா பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை போன்ற ஒரு நாட்டில் சர்வதேச விசாரணை எதுவும் சாத்தியமில்லை என்றும் இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் கூறும் கமலேஷ் சர்மா, வழமைபோல மாநாட்டில் அனைத்து நாடுகளும் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

காலனிய ஒடுக்குமுறையுன் குறியீடான பொதுநலவாய நாடுகளின் கூட்டு இன்று இனப்படுகொலையின் குறியீடாகவும் மாறியுள்ளது.
அனைத்து அரசுகளும் இணைந்தே இனக்கொலையை நிகழ்த்தியதை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளார்கள்.

ஏகபோக அரசுகளுடன் இணைந்து விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறும் பிழைப்புவாதிகளும் அழிப்பு நடத்துவதற்குத் துணைபோகும் கொடியவர்களே.

Exit mobile version