அமரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் சவூதி அரேபியா போன்றவை இலங்கை அரசிற்கு ஆதரவான நிலைப்பாட்டை போர்க்குற்ற விசாரணைகளின் போது முன்னெடுக்கின்றன. மத்தியகிழக்கு பிரச்சனைகள் உட்பட உலகின் அனைத்து அணிசேர்க்கைகளிலும் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுத்த இந்த நாடுகள் இலங்கை குறித்து நடைபெறும் போர்க்குற்ற கண்துடைப்பு நாடகத்தில் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. ஆக, இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் அமெரிக்க அரசிற்கு முக்கிய அரசியல் பிரச்சனை அல்ல.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு உதவியாக அமையாது என ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய உதவி அமைச்சர் கிஹாரா, அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்குத் தமது நாடு தொடர்ந்தும் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
தமிழ்ப்பேசும் மக்களுடைய தன்னுரிமைக்கான போராட்டம் என்பது வல்லாதிக்க அரசுகளுக்கும் எதிரானது என்ற உண்மையை அமெரிக்கா போன்றே ஜப்பானும் கற்றுத்தருகிறது.