தேர்தல் விடயங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்வது ஜனநாயக விரோதமானது. வட மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக விரோத சூழ்நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய இரண்டு மாகாணங்களிலும் ஜனநாயக ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.
ஆளும் கட்சியினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர வேறும் கட்சி உறுப்பினரினால் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆளும் கட்சிக்குள் இடம்பெற்ற மோதலின் காரணமாகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டார்.
அரசாங்கத்தின் பிழைகள் காரணமாகவே சர்வதேச முதலாளித்துவ அமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையில் விசாரணை நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் சர்வதேசம் தலையீடு செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நிலைமை பற்றி நவனீதம்பிள்ளை கேட்டால் நாட்டில் பாசிச ஆட்சி நடத்தப்படுவதாக குறிப்பிடுவேன் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.