Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச மனித உரிமை சாசனங்களை இலங்கை மீறியதாகக் கண்டறிவு:ஐரோப்பிய ஒன்றிய விசாரணை அறிக்கை இன்று வெளிவரும்!

 இலங்கை அரசாங்கம்இ மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச சாசனங்களுக்கு மதிப்பளிக்காமல் அவற்றை மீறியுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக “றொய்ற்றர்” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணை அறிக்கை இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கடந்த சுமார் ஒருவருடகாலமாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அநேகமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகை நிறுத்தப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்ததாக “றொய்ற்றர்” செய்தி மேலும் தெரிவித்தது.

“ஜி.எஸ்.பி + வரிச்சலுகையைப் பெறுவதற்கான விதிகளில் ஒன்றான அடிப்படை மனித உரிமைகளைப் பேணும் நிபந்தனையை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பது மிகத்தெளிவாகி விட்டது” என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

தனக்கு வழங்கப்படும்  “ஜி.எஸ்.பி + வரியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில்இ இலங்கை அரசு 27 சர்வதேச மனித உரிமை சாசனங்களை தப்பாது கடைப்பிடிக்க வேண்டும் என்று இலங்கையிடம் நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக எச்சரித்துவந்தது. ஜி.எஸ்.பி + வரிச்சலுகையானதுஇ குறுகியகால அரசியற் பிரச்சினையை கவனத்தில் எடுத்து வழங்கப்படுவதில்லை. அது நீண்டகால ஸ்திரத்தன்மையை நோக்கி கருத்திற் கொள்ளப்படுவதாகும்  என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு அதிகாரியொருவர் கூறினார்.

“இது ஒரு வர்த்தகத் தடையல்ல ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையைப் பெறுவதற்கான விதிமுறைகள் பல உண்டு. அந்த விதிமுறைகளை மீறினால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய துரதிர்ஷ்டம் உண்டு”. என்றும் அந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறினார். பொலிஸாரின் வன் செயல்கள்இ உடல்ரீதியான சித்திரவதைஇ தொழில் சட்டங்கள் மீறப்பட்டவைஇ வயது குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்துதல் ஆகிய குற்றங்களை இலங்கை புரிந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version