இந்த வருடத்தின் ஜனவரி – மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமானமற்ற போர் சட்ட முறைகளுக்கு எதிரான யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் கடந்த 22 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, 7000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், 13,000 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் போர்க் காலத்தில் பொது இடங்களான வைத்தியசாலைகள் மற்றும் பொது நிலையங்களை இலக்கு வைத்து எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தமை வெளிப்படையான உண்மை. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதிப்படங்களும் உறுதி செய்திருந்தன.
இந்த நிலையில், அவற்றுக்கு எதிராக சர்வதேசத்தின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ரீதியாக வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றை நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், தற்போது அதனைத் தவிர்ப்பதாக உள்நாட்டு பக்கச் சார்பான நிபுணர்களை நியமித்து விசாரணை நடத்துவதாகவும், உண்மை நிலையினை நீதியான முறையில் சர்வதேச விசாரணைக் குழுவே கண்டறியும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய பிராந்திய செயற்பாட்டாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.