27.11.2008.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது;
பொருளாதார நெருக்கடியால் சம்பளக் குறைப்பு, கூலிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்புள்ளது. இதனால், உலகம் முழுவதும் 150 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால், உலகம் முழுவதுமே நெருக்கடியான நிலை ஏற்படும். உணவு, பொருட்கள் விலை உயரும்.
ஏற்கனவே ஏராளமான ஊழியர்கள் வேலைக்கு தகுந்த சம்பளம் பெறவில்லை. இப்போது சம்பள குறைப்பு வரும் போது நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும்.
2008 ஆம் ஆண்டில் உலக சம்பள வளர்ச்சி விகிதம் 1.7 சதவீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அது 1.1 வீதமாகக் குறையும். எனவே, பல நாடுகளில் குறிப்பாக பொருளாதார வளம் நிறைந்த நாடுகளில் சம்பளம் குறைக்கப்படும்.
தொழில்துறையை சார்ந்த நாடுகளில் 2008 ஆம் ஆண்டில் சம்பள வளர்ச்சி விகிதம் 0.8 சதவீதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் அது 0.5 சதவீதமாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 1 சதவீதமாக இருந்தது. சம்பள வளர்ச்சி விகிதம் 0.75 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அதில் தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.