Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச சட்டங்களை அமெ. போர்க்கப்பல்கள் மீறின : சீனா புகார்.

11.03.2009.

தெற்கு சீனக்கடல் பகுதி கள் உள்ள சீனாவின் சிறப்பு பொருளாதார மண்டலத் தில் சில நடவடிக்கை களை நடத்தியதன் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் சர்வதேச சட்டங்களை யும், சீனச் சட்டங்களையும் மீறிவிட்டது என சீன அயல்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவின் அனுமதி யின்றி அமெரிக்க போர்க் கப்பல் யுஎஸ்என்எஸ் இம் பெக்கெபிள் சில நடவடிக் கைகளில் ஈடுபட்டது. சீனா வின் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிகளில் நடத் தப்பட்ட செயல்களின் மூலம் அமெரிக்கா சர்வ தேச சட்டங்களையும் சீனச் சட்டங்களையும் மீறிவிட் டன என்று அமெரிக்கா விடம் சீனா எதிர்ப்பு தெரி வித்துள்ளதாக சீன அயல் துறை செய்தித் தொடர் பாளர் மா ஜாவோக்சு செய் தியாளர்களிடம் கூறினார்.

இந்நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். இது போன்றவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அது உறுதி செய்ய வேண் டும் என்றும் அவர்கூறினார். ஆனால், அமெரிக்கா இதை மறுப்பதுடன் சீனா மீது புகார் கூறுகிறது. ஒரு போர்க் கப்பல் உள்ளிட்ட சீனக் கப் பல்கள் ஞாயிறன்று சர்வ தேச கடல் பகுதியில் அமெ ரிக்க கப்பல் இம்பெக்கெ பிளை தொந்தரவு செய்தன என்று பென்டகன் கூறு கிறது.

அமெரிக்கா, உண்மைக்கு புறம்பாகப் பேசுகிறது. மொத்தத்தில் குழப்பதை ஏற்படுத்துகிறது. அமெ ரிக்கா கூறுவதை ஏற்க முடி யாது என்று மா கூறினார். கடல் சட்டங்கள் குறித்த ஐ.நா. உடன்படிக்கை, தனிப் பட்ட பொருளாதார மண் டலச்சட்டங்கள்,மற்றும் மக்கள் சீனக் குடியரசின் பல சட்டங்கள் ஆகியவற்றில் சீனாவின் தனிப்பட்ட பொருளாதார மண்டலப் பகுதிகளில் அந்நிய கப் பல்களின் செயல்பாடு குறித்து தெளிவான வரையறை களும் பிரிவுகளும் உள்ளன என்றும் மா கூறினார். சீனா இதுபோன்ற அந்நியக் கப்பல் நடமாட்டங்களை இச்சட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் உட் பட்டே கையாளுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version