Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேசச் சட்ட வரம்புகளை மீறும் திட்டமிட்ட படுகொலை : சொம்ஸ்கி

அடிப்படையான சர்வதேசச் சட்டங்களை மீறுகின்ற திட்டமிட்ட படுகொலை தான் அமரிக்காவின் ஒசாமா பின்லாடன் மீதான தாக்குதல் என நாஓம் சொம்ஸ்கி குற்றம்சுமத்தியுள்ளார். நிராயுதப்பாணியான ஒருவரை அமரிக்கப்படைகள் கொலைசெய்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அரச படைகளுக்கு ஒசாமா அபோதாபத் நகரில் தங்கியிருப்பது தெரிந்திருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறித்து அமரிக்கர்கள் கோபமடைந்துள்ளனர் என ஊடகங்கள் அதிகமாகப் பேசுகின்றன. அதே வேளை, தமது நாட்டின் எல்லைக்குள் அமரிக்கப்படைகள் அத்துமீறி நுளைந்து படுகொலை ஒன்றை நிகழ்த்திவிட்டுச் சென்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர்கள் கோபமடைந்திருப்பது குறித்து ஊடகங்கள் அதிகம் பேசுவதில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கெர்னிகா(Guernica) இதழில் சொம்ஸ்கியின் முழுமையான குறிப்புக்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version