Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்ச்சையிலும் சிக்கலிலும் முடிவடைந்த GTF ஒன்று கூடல் : புதிய அரசியலின் தேவை

நாடுகடந்த தமிழீழம், அனைத்துலகச் செயலகம் – தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகம் – தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற முரண்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்த இந்த ஒன்று கூடல் பெரும் சிக்கலிலும் குழப்பத்திலும் முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரேன் சுரேந்திரன், கிறீஸ்தவ மதகுரு இமானுவேல் போன்றோர் பேச முற்பட்ட போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் உரை தடைப்படுத்தப்பட்டது என்று தெரியவருகிறது.
சுரேன் சுரேந்திரன், கிறீஸ்தவ மதகுரு இமானுவேல் போன்றோர் பேச முற்பட்ட போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் உரை தடைப்படுத்தப்பட்டது என்று தெரியவருகிறது. உலகத் தமிழர் பேரவை இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றமை குறித்தான கேள்விகள் உட்பட பலவற்றிற்குப் பதிலின்றி நிறுத்தப்பட்டன.
புலம் பெயர் நாடுகளில் அரசியலின்றி இயங்கும் அமைப்புக்கள் அனைத்தும் இந்திய, ஐரோப்பிய, அமரிக்க நிதி நிறுவனங்களின் பணக்கொடுப்பனவுகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கான சில ஆதாரங்கள் இனியொருவிற்கு கிடைகப்பெற்றுள்ளன. இவற்றின் ஊடாக இலங்கை அரச நிகழ்ச்சி நிரலிற்குள் இவை அனைத்தும் உள்ளடக்கபடாலாம் என்பதற்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்த முழுவிபரங்கள் ஆதரத்துடன் முன்வைக்கப்படும்.

Exit mobile version