Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்கோசி – தலாய்லாமா சந்திப்பை சீனா எதிர்க்கிறது. தன் எதிர்ப்பை வெளியிடும் வகையில் சீனாவில் பிரான்ஸ் பொருட்கள் புறக்கணிப்பு !

07.12.2008.

திபெத்தைவிட்டு தப்பி யோடிய தலாய்லாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி சர் கோசி சந்திக்கத் திட்டமிட் டுள்ளார். இந்தச் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில் பிரான்ஸ் நாட்டு பொருட் களைப்புறக்கணிக்க வேண் டுமென்று சீன மக்களி டையே கருத்துக்கள் வலுப் பெற்று வருகின்றன.

சர்கோசி – தலாய்லாமா சந்திப்பை சீனா எதிர்க் கிறது. தன் எதிர்ப்பை வெளி யிடும் வகையில் சீனா – ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை சீனா புறக்க ணித்தது. ஆனால், இதுபோ தாது, இன்னும் கடுமை யாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி யுள்ளது.

தற்போது அரசு இதில் தலையிட விரும்பவில்லை. இணையதளத்தில் வெளியி டப்பட்ட புறக்கணிப்பு அறை கூவலை அரசு தடை செய் துள்ளது. பெய்ஜிங் ஒலிம் பிக் தீபத்துக்கு பாரீஸ் வாழ் திபெத்தியர்களும், பிரான்ஸ் மக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சீன எதிர்ப் பாளர்கள் மீது அரசு நட வடிக்கை எடுக்கவில்லை. சர்கோசியும், திபெத்துக்கு ஆதரவாக அறிக்கை விடுத் தார். அதை எதிர்த்து பிரான்ஸ் பொருட்கள் புறக்கணிப்பு நடைபெற்றது.

நூறாண்டு காலமாக சர் வாதிகாரம், வறுமை, மற் றும் அரசியல் உறுதி இல் லாமையால் துவண்டிருந்த சீனா உலக வல்லரசாகவும், பொருளாதார சக்தியாக வும் வளர்ந்து வரும் வேளை யில் முதலாளித்துவ நாடுகள் தலாய்லாமாவை சீனாவுக்கு எதிராகத் திருப்பி விடுகின் றன. தலாய்லாமா திபெத் தில் கலகங்களைத் தூண்டி வருகின்றார் என்று சீனா கூறுகிறது.

பிரஸ்ஸல்சில் டிசம்பர் 4 அன்று நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளு மன்றக் கூட்டத்தில் தலாய் லாமா உரையாற்றியுள்ளார். டிசம்பர் 6 அன்று போலந்து கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் வலேசாவைக் கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சர்கோசி அதே நாளில் தலாய் லாமாவையும் சந்திக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளுட னான உறவுகளில் சீனா விடம் வர்த்தக உபரி உள் ளது. பிரான்ஸ் பொருட்கள் புறக்கணிப்பு இருமுனைக் கத்தி என்று சீன அரசு கருதுகிறது. எனவே, சீன அரசு பிரான்சுடன் ஏற்பட் டுள்ள உறவு விரிசலை அடக்கி வாசிக்க விரும்புகிறது.

Exit mobile version