BDO என்ற கணக்காளர் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பிரித்தானியாவில் வர்த்தக மந்த நிலை கடந்த 21 வருடங்களின் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான மந்த நிலை என்பது பொதுவான வர்த்தகத்தைக் குறிப்பிட்டாலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமே இவ்வாறான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இறுதிக் கட்டம் என்ற நிலை உறுதிப்படுத்தப்படுகிறது. பல்தேசியப் பெரு நிறுவனங்கள் தமது வருவாயை மூன்று மடங்காக அதிகரித்துள்ள நிலையில் BDO நிறுவனம் பிரித்தானியா மூம்மடங்கு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என எதிர்வு கூறியுள்ளது.
புரட்சி என்பது உடனடியான அச்சுறுத்தலாக இல்லாத நிலையில் பிரித்தானிய சமூக நலத் திட்டங்களை முற்றாக நீக்கி மக்கள் மீது பொருளாதாரச் சுமையை அதிகரித்து வருகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிக்கான தலைமை அற்றுப்போன நிலையில் பிரித்தானியாவில் திடீர் கிளர்ச்சிகளும் வன்முறைகளும் தோன்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.