இவ்வாரம் உலகெங்கும் பரவலாகப் மக்கள் எழுச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. போத்துக்கலில் அரசாங்கம் அறிவித்துள்ள வரி மற்றும் சமூக உதவித் திட்டங்களின் நீக்கம் தொடர்பாக 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லிஸ்பன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமரிகாவில் வால் ஸ்ரீட் ஐக் கைப்பற்றும் இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் பொலீசாரால் கைது செய்யப்பட்ட போதும் ஆர்ப்பாட்டாம் தொடர்ந்து நடைபெறுகிறது. பன்நாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிரான இவ்வியக்கதின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் நடைபெறுகின்றன. கிரேக்கத்தில் அனாகிஸ்ட் உட்பட பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஸ்பெயின் தலை நகரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பல்கேரியா ரூமேனியா ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் தமது அதிகார அமைப்பு முறையிலிருந்து இன்னும் சில வருடங்களுக்குள் தூக்கியெறியப்படும் என பொருளியல் வல்லுனர்கள் எதிர்வு கூறுகின்றனர்.