Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரவ்தேச குற்றவாளியின் வாக்குமூலம்

உலகமே அறிந்த குற்றவாளிகளில் ஒருவர் இப்போதுதான் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார். ஆனால், அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை குற்ற உணர்ச்சியோ, மன உறுத்தலோ இல்லாமல் அளித் திருக்கிறார். மாறாக, அதைப் பற்றிய ஒரு பெருமிதத்தையே ஆணவத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

பேரழிவு ஆயுதங்களை இராக் தலைவர் சதாம் உசேன் மறைத்து வைத்திருக்கிறார் என்பதாக குற்றம் சாட்டி, அந்த நாட்டின் மீது அமெரிக் காவும் அதன் தலைமையில் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை உலகம் மறந்துவிட முடியாது. அந்த மரண வியாபாரத்தின் கூட்டாளியாக இருந்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அண்மையில் பிபிசி1 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியில், “இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று தெரிய வந்திருந்தாலும் கூட அந்தத் தாக்குதலை நடத்தியிருப்போம்,” என்று கூறியிருக்கிறார். .

இராக்கில் அணுகுண்டுகள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக முதன் முதலில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய போதே, அது எண்ணெய் வளம்மிக்க இராக்கை ஆக்கிரமிப்பதற்கான தந்திரம்தான் என்று உலகளாவிய அமைப்புகள் சுட்டிக்காட்டி எச்சரித்தன. பன்னாட்டு அணு சோதனை ஆய்வு மையம் இராக்கில் தீவிரமான சோதனை நடத்தி, அங்கு அப்படிப்பட்ட ஆயுதங்கள் இல்லை என அறிவித்தது. இருந்தபோதிலும் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புத் திட்டத்தை நிறைவேற்றியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதாக அதற்கொரு பெயர் சூட்டியது. இறுதியில் சதாம் உசேன் தூக்கில் மாட்டி கொலை செய்யப்பட்ட தோடும் லட்சக்கணக்கான இராக் மக்கள் பலியிடப்பட்டதோடும் அது முடிவுக்கு வந்தது.

டோனி பிளேர் இந்த பேட்டியை ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் அளித்திருக்கிறார் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. உல கம் முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒரு பெரும் போராட்டத்தின் ஒரு பகுதியே அது என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். முன்பு ஜார்ஜ் புஷ், இராக் மீதான தாக்குதலை சிலுவை யுத்தம் என்று கூறி, ஒரு மதவாதத்துக்குள் புகுந்து கொள்ள முயன்றார். அதை போன்ற செயல்தான் இப்போது பிளேர் செய்வதும். பயங்கர வாதம் என்பதை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு இணைத் துக் காட்டுகிற இழிவான முயற்சி அது.

2003ம் ஆண்டில் டோனி பிளேர் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தமது செயலை நியாயப்படுத்தி பேசியபோது, ஐ.நா. அமைப்பின் தீர்மானங்களை ஏற்று செயல்பட சதாம் உசேன் முன்வந்திருப்பாரானால், அவர் தனது நாட்டைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறினார். அங்கே இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்ப தற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடிய வில்லை என்ற போதிலும் பிளேர் இவ்வாறு பேசினார். இன்று அதனை வேறு வகையில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதன்மூலம் அவர் தனது நாட்டு மக்களை மட்டுமல்ல, உலகத்தையே அமெரிக்க அதிபரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் என்பது அம் பலமாகிறது. இந்த உலகக் குற்றவாளிகள், இப்படி தங்களது குற்றத்திற்கு எந்த தண்டனையும் இல்லாமல், பெருமிதத்தோடு சுற்றிவர முடிகிறது என்பது மனிதநேயத்திற்கே பெருத்த அவமானம்.

நன்றி: தீக்கதிர்

Exit mobile version