Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேக்காவிற்கான பாதுகாப்பு குறைப்பு!

அரசாங்கம் சரத் பொன்சேக்காவிற்கு வழங்கிவந்த பாதுகாப்பைப் குறைத்துள்ளது. இதன்படி அவருக்கு வழங்கப்பட்டுவந்த 400 படையினரின் பாதுகாப்பு எண்ணிக்கையை 25ஆக குறைத்துள்ளது. அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஜீப் வண்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதுடன் பி.எம்.டபிள்ய+ மற்றும் குண்டு துளைக்காத வாகனமொன்று மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக ஜெனரல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்ட போது அவருக்கு 400 படையினரின் பாதுகாப்பும் 25 வாகனங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடற்படைத் தளபதியாக பணியாற்றி, ஓய்வுபெற்ற வசந்த கரண்ணாகொட ஓய்வுபெற்ற பின்னரும் 100 கடற்படையினரின் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத இரண்டு வாகனங்கள் உள்ளிட்ட ஆறு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரையும்விட விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி, அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக்கொண்டுள்ள கருணாவிற்கு அதிகளவான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் சரத் பொன்சேக்காவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி, பொன்சேக்கா உள்ளிட்ட யுத்தத்திற்குத் தலைமை தாங்கிய இராணுவத் தலைவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உச்சப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேக்கா அரசியலுக்கு வருவதைத் தடுப்பதற்காக அவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ள ஜனாதிபதி 48 மணித்தியாலம் செல்ல முன்னர் அந்த உறுதிமொழியை மீறியுள்ளார்.

இந்த நிலையில், சரத் பொன்சேக்கா சமர்ப்பித்த ஓய்வுபெறும் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்துள்ளார்.

Exit mobile version