இதற்கான இணைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலத்தின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி அண்மையில் சரத் பொன்சேக்காவைச் சந்தித்துள்ளார்.
மேலும், சரத் பொன்சேக்காவின் விசேட பிரதிநிதியொருவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் (09) நேற்று இந்திய அதிகாரிகள் சிலரைச் சந்தித்துள்ளதாக மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவிப்பது, அந்நாள் நடப்பு அரசாங்கத்தின் கீழ் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வது ஆகிய நிபந்தனைகளுக்கு சரத் பொன்சேக்கா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவரது பிரதிநிதி இந்தச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது பலவீனமடைந்துள்ள இராஜதந்திர தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் சரத் பொன்சேக்கா விசேட கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக சரத் பொன்சேக்காவின் பிரதிநிதி இதன்போது கூறியுள்ளார்.