முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய டிரான் அலஸ் நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே டிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக் காலை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய பின்னர் டிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.
சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்று காலை நான் ஜனாதிபதியை சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய பிரதானமானவர்களுள் ஒருவரான சரத் போன்சேகாவை அமரிக்கா மகிந்தவிற்கு மாற்றாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.