
அமெரிக்க உயர் இராஜதந்திரி ஒருவருக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கை அரச பாசிசத்தின் பிடியில் ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்கள் இலங்கை அரசின் சிறையில் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். பல ஆயிரக்காக்கானோர் காணமல் போயுள்ளனர். மனித உரிமையாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே அறிய முடியாத நிலையில் ராஜபக்ச குடும சர்வாதிகாரம் ஆட்சி செலுத்துகிறது. இவர்கள் குறித்தெல்லாம் மூச்சுவிடக்க்கூட எண்ணாத அமரிக்க அரசு, சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோருகிறது.
வன்னி இனப்படுகொலையை ராஜபக்சக்களினதும், இந்தியா மற்றும் வல்லரசுகளினது சார்பில் தலைமைதாங்கி நிகழ்த்திய சரத் பொன்சேகாவை அமரிக்க அரசு விடுதலைசெய்யக் கோருவது அரசியல் உள்நோக்கம் உடையது.
சரத் பொன்சேகா யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக செயற்பட்ட போது செம்மணிச் மையானத்தில் சந்தேகத்திற்கு இடமான இளைஞர்கள் 500 பேர்வரை அடையாளம் தெரியாமல் கொலைசெய்யபட்ட்னர். அவ்வேளையில் காணாமல் போனோரை இன்றுவரை பெற்றோர் தேடியலைகின்றனர்.