Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகா விடுதலையில் அமரிக்காவிற்கு அக்கறை

இலங்கையின் முன்னை நாள் இராணுவத் தளபதியும் மகிந்த ராஜபக்ச அரசுடனும் முன்னைய அரசுகளுடனும் இணைந்து இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான விடயத்தில் போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால்,தலையிட தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த கோரிக்கை மனுக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதுடன், பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு ஒன்று அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25,000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் பொன்சேகா விவகாரத்தில் தலையிட முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வன்னியில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்ந்தபோது அமரிக்கா செய்மதியில் அப் படுகொலைகளைப் கண்காணித்துக்கொண்டு இருந்தது. இதன் பின்னதாக அமரிக்க அரச பிரதிநிதி ஆப்லானிஸ்தானுக்கு இலங்கை இராணுவத்தைப் போரிடுவதற்கு அனுப்பிவைக்குமாறு பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்சவைக் கோரியிருந்தார்.

Exit mobile version