Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகா – மகிந்த : முரண்பாடு வலுக்கிறது!

இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவுவரை தன்னை இராணுவத் தளபதி பதவியில் வைத்திருக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஜனாதிபதி அதனைக் கருத்திற்கொள்ளாது அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றி பெயரளவிலான கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமித்தார். இருந்தபோதிலும் சரத் பொன்சேகா இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவிற்காக முன்நின்று செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கண்காட்சிக்கானப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக நேற்று முற்பகல் சரத் பொன்சேகா அங்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கை இராணுவத்தின் 60 வருட வரலாற்றை வெளிக்கொண்டுவரும் இந்த விசேட கண்காட்சி எதிர்வரும் 3ம் திகதி முதல் 7ம் திகதி வரை மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்ப்ட்ட ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னரான முதலாவது இராணுவத்தினரின் ஆண்டு நிறைவு அனுஷ;டிக்கப்படும் வரையும் இராணுவத் தளபதியாக பதவி வகிக்க முடியாது போனமையானது சரத் பொன்சேகாவை மனரீதியாக பாதித்துள்ளதாகத் தெரியவருகிறது.

கோலாகலமாகக் கொண்டாடும் நோக்கில் அதனை ஏற்பாடு செய்யவும் அத்துடன், சமய நிகழ்வொன்றை நடத்தவும் முன்னாள் இராணுவத் தளபதி உச்சபட்ச தலையீடுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரியவருகிறது.

Exit mobile version