
ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் ஊழல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த பொன்சேகாவை ராஜபக்ச குடும்பத்தினர் தேர்தல் நாளன்றே கைதுசெய்ய முற்பட்டனர். பின்னதாக பொன்சேகா இலங்கையை விட்டு வெளியேறுவத்தற்கான சட்டரீதியான வழிகள அனைத்தும் தடைசெய்யப்பட்டது. இன்று இரவு இலங்கை நேரப்படி ஏழு மணியளவில் பொன்சேகா கைதுசெய்ய்ப்பட்டார்.
இராணுவக் குற்றச் செயல்களின் அடிப்படையில் பொன்சேகாவை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று இலங்கை அரசுக்கு எதிரான போக்குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையில் குற்றவியல் நீதி மன்றத்தில் மரண தண்டனை முறைமை நீக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இராணுவ நீதி மன்றத்திடம் இவர் ஒப்படைக்கப்படலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.