போரின் நாயகர்கள் இப்போது அதிகாரச்சண்டையில் எதிரிகளாக மாறிப்போயினர். கொலைகளைச் செய்யத் தூண்டிய ராஜபட்சே அதிபராகி கொலைகளைச் செய்த சரத்பொன்சேகா இப்போது சிறையில் மிகப்பெரிய சதுரங்க ஆட்டத்தில் யாருடைய தலை எப்போது உருளும் என்று தெரியாத நிலையில். இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மேர்வின் சில்வா.” “பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது.” என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.