அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றக் கொண்டதன் பின்னர் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.
இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் காணப்படுவதனால் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இதேவேளை, தாம் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசாங்கம் தம்மை பழிவாங்குவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனிடம் எதிர்வரும் நாட்களில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்த உள்ளனர்.
இராணுவ நீதிமன்றில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைத்தண்டனை விதிக்கவோ அல்லது மரண தண்டனை விதிக்கவோ இராணுவ நீதிமன்றிற்கு அதிகாரம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மூன்று ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்