Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகாவிற்குப் பிணை : அமரிக்கத் தலையீடு

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இலங்கை நீதிமன்றம் ஒன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அமரிக்காவின் நேரடித் தலையீட்டின் அடிப்படையில் சரத்பொன்சேகாவின் விடுதலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இனப்படுகொலையை ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து நடத்திய பொன்சேகா, 90 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களைச் சாரி சாரியாகக் கொலைசெய்தவர்.
இவருக்கு எதிரான ஏனைய வழக்குகளும், இவருக்கு பிணை வழங்கப்படக் கூடியவையே என்ற காரணத்தால், இந்த வழக்கில் இவருக்கு பிணை வழங்குவதற்கு தமக்கு ஆட்சேபணை இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களமும் அறிவித்திருந்தது.
இதற்கமைய 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அவரது கடவுச் சீட்டு நீதிமன்றத்திலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் வெளிநாடு செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version