Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகாவின் பேரினவாதக் கருத்துக்கள்

இன்றைய ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவின் நேர்காணல்கள் தொடர்பாக பாக்கியசோதி சரவணமுத்துவின் CPA ( Centre for Policy Alternatives) நிறுவனம் விடுத்திருந்த கண்டன அறிக்கையின் முதல் பகுதி. அப்போதைய இராணுவத் தளபதியின் இந்த நேர்காணல் 28/11/2008 அன்று வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கனடாவிலிருந்து வெளியாகும் நஷனல் போஸ்ட் செய்திப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதுடன் அதுதொடர்பான எமது மறுப்பையும் தெரிவிக்கிறோம். இலங்கை அரசியல் சூழல் குறித்து சரத் பொன்சேகா கவலை தரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என நான் உறுதியாக நம்புகிறேன். இங்கு சிறுபான்மை இனக்குழுக்கள் உள்ளன. அவர்களை நாம் எமது மக்களைப் போலவே நடத்துகிறோம். நாம், இந்த நாட்டின் பெரும்பான்மையினராக, 75 வீததினராக இருக்கும் நிலையில், நாங்கள் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதில்லை என்பதோடு எமக்கு இந்த நாட்டைப் பாதுகாக்கும் உரிமையும் உள்ளது… நாங்கள் பலமான தேசம்.. அவர்கள், சிறுபான்மையினர்- எமது தேசத்தில் எம்மோடு இணைந்து வாழலாம். சிறுபான்மையினர் என்ற சாக்கில் அவர்கள் தேவைக்கு அதிகமாகக் கேட்கக் கூடாது” – என்று குறிப்பிடுகிறது பல விடயங்களைக் கூறுகின்ற சரத் பொன்சேகாவின் நேர்காணல்.

Exit mobile version