Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகாவினதும் புலம்பெயர் புலி பிழைப்புவாதிகளதும் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை

ranil_maythiry_chandrika_sarathஇலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கலாம் எனவும் விடுதலைப் புலிகள் மீள உருவாகலாம் என்று இலங்கையின் முன்னை நாள் இராணுவத் தளபதியும் இன்றைய ஆட்சியின் முக்கிய பங்குதாரியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். .

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என சரத் பொன்சேகா மேலும் தெரிவிக்கிறார்.

இலங்கையின் மிகக் கோரமான இராணுவத் தளபதிகளில் சரத் பொன்சேகாவும் ஒருவர். பல்வேறு கொலைகள், குற்றச்செயல்களுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சரத் பொன்சேகா தொடர்புடையவர்.

வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா என்றும் அவர் தெரிவித்தார்.

பவுத்த சிங்கள பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவும், இனக்கொலையாளி சரத் பொன்சேகாவும் அங்கம் வகிக்கும் இலங்கை அரசு பேரினவாதத்தை இவர்கள் இருவர் ஊடாகவும் ஆரம்பித்துள்ளது.

ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமை வழங்கப்படாலே தவிர அவர்களின் உரிமைக்கான போராட்டம் மீண்டும் தலை தூக்கும். முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னெழக் கூடிய போராட்டத்தை அழித்து அதனைப் பேரினவாத அரசியலாக மாற்றும் ஆரம்ப நடவடிக்கைகளை சரத் பொன்சேகா ஆரம்பித்துள்ளார்.

இலங்கை பேரினவாத அரசும், புலம் பெயர் பிழைப்புவாதிகளும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் புலிகளின் பெயரால் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த இரு பகுதியினரும் இரகசிய ஒப்பந்த அடிப்படையில் செயற்படுகின்றார்களா அன்றி இணைந்து செயற்படுகின்றனரா என்பது தெளிவில்லை.

அதே வேளை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி புலம்பெயர் நாடுகளில் பிழைப்பு நடத்திய அமைப்புக்கள் மீண்டும் பணம் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. வட கிழக்கைத் தொடர்ந்து இராணுவமயப்படுத்துவதற்காக இராணுவமே புலிகளின் பெயரில் தாக்குதலை நடத்தக்கூடும். அப்போது சேர்க்கப்பட்ட பணத்தைப் புலம்பெயர் பிழைப்புவாதிகள் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்வார்கள். சரத் பொன்சேகாவின் அறிக்கைக்கும் பணம் திரட்டப்படுவதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா, இவை இருபக்க வியாபாரிகளதும் திட்டமிட்ட செயற்பாடுகளா என்ற விபரங்கள் உள்வீட்டு ரகசியங்கள்.

Exit mobile version