Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மிரட்டல்

சரத் பொன்சேகாவின் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் நீதிபதி வராவெவவின் கருத்து நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதிபதி வராவெவின் கணனி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த நீதிபதியின் தீர்ப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவானதாக அமைந்திருந்ததே இதற்கான காரணம் எனத் தெரிய வருகிறது.
மகிந்த ராஜபக்ச அரசு விரும்பாத ஒன்றை தீர்ப்பாக வழங்கிய நீதிபதி பின்னதாக மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version