இறுதி யுத்தத்தின் போது 11ஆயிரத்து 800 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர் என்றும் இவர்களில் 8ஆயிரத்து 240 விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு அமைச்சு உத்தியோகபூர்வமாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
புனர்வாழ்வு மறுசீரமைச்சின் கணக்குப்படி 3560 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும். இவர்களில் 1700பேரை நேற்று அலரி மாளிகையில் விடுதலை செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மிகுதி 1740பேர் புனர்வாழ்வு மறுசீரமைப்பு ஆரம்பத்தில் தெரிவித்த கணக்கின் படி தடுப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 900பேர் மட்டுமே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
புனர் வாழ்வு அமைச்சின் உத்தியோக பூர்வக் கணக்கெடுப்பு மட்டுமே அடிப்படையில் தவறானதாக அமையும் நிலையில் இன்னமும் அதிக அளவிலான போராளிகளுக்கு என்ன நடந்திருக்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
இனப்படுகொலை இலங்கை அரசுடன் இணைந்து போராளிகளைப் பாதுகாப்பதாகக் கூறும் கே.பி மற்றும் அவர்களின் புலம் பெயர் ஏஜண்டுகள் இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையிலுள்ளனர்.