Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரணடைந்த பின்னர் இலங்கை பாசிச இராணுவம் இசைப்பிரியாவைக் கொலைசெய்தது

isaipriyaஇலங்கை பாசிச இராணுவம் பொதுமக்களையும் போராளிகளையும் புலிகளின் தலைவர்கள் பலரையும் சரணடையுமாறு கோரிக்கைவிடுத்தது. இச்சரணடைவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு நாடுகளும், அவற்றைச் சார்ந்தவர்களும், கே.பி உட்பட பல்வேறு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். ராஜபக்ச அரசு போராளிகளையும் பொதுமக்களையும் தெரிந்தெடுத்துக் கொலைசெய்வதற்காகவே இவர்களைச் சரணையுமாறு நாடகமாடியது என்பது பலதடவை மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த முறை விடுதலைப் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சி ஊடகவியலாளரும், கலைஞருமான இசைப்பிரியா உயிருடன் கைதுசெய்யப்பட்டு இராணுவத்தின் காவலரன்களில் வைக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.

எனினும் வழமைபோன்று இராணுவம் அதனை மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.

உயிரை உலுக்கும் இத் தகவல்கள் இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமக்கான போராட்ட தந்திரோபாயத்தை வகுத்துக்கொண்டு போராட்டத்தைத் திட்டமிட வேண்டும் என்பதைக் கூறுகிறது.

இதன் மறுபக்கத்தில் இவ்வாறான தகவல்கள் தேசிய வியாபாரிகளால் பணம் பறிக்கும் நோக்கத்துடன்

பயன்படுத்தப்படுகின்றது.

Exit mobile version