தடுப்புக் காவலில் உள்ள சரணடைந்த விடுதலைப் புலிகளை தாக்கி பலரைக் கொலைசெய்ய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் சில புலி உறுப்பினர்களைக் கொண்டு, இந்த முகாமில் உள்ள புலிகளை அவர்கள் மீட்பது போல ஒரு நாடகமாடி, அவர்கள் தப்பிச் செல்லும்போது இராணுவத்தினர் அவர்களை சுட்டுக் கொல்வது போன்ற நிகழ்வொன்றை நடத்த புலனாய்வுப் பிரிவினர் திட்டம் தீட்டியுள்ளதாகச் செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சரணடைந்துள்ள 10,000 முன்னாள் புலி உறுப்பினர்களில் பலரைக் கொல்ல இலங்கை ராணுவ புலனாய்வுப் பிரிவினர் திட்டம் தீட்டியுள்ளதாக தமது பெயரை வெளிவிட விரும்பாத மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் War Without Witness க்குத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அல்லது நம்பகத்தன்மையை War Without Witnessஆனது ஆராய்ந்து அங்கீகரிக்கவில்லை எனினும் அதன் இணையத்தளத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரின் அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், தற்போது காவல்துறையினரின் தடுப்புக் காவலில் உள்ள புலி உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்த முகாம்களிலுள்ள புலிகளை மீட்க வைப்பது போன்ற நாடகத்தை நடத்த திட்டம் தீட்டுகின்றனர். எனவே மீட்புத் தாக்குதலை அடுத்து முகாம்களிலுள்ள புலிகள் உண்மையில் தப்ப முயற்சிக்கும்போது முகாம்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ராணுவத்தினர் அவர்களைச் சுட்டுக் கொல்லவுள்ளனர் என்றும் அவர், இது பாரியதொரு படுகொலையாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இக் கூற்றுக்களை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.