விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில், சர்வதேச நாடுகளின் முயற்சியின் பேரில் ராணுவத்திடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விளக்கம் தருமாறு இலங்கைக்கான ஐநாவின் சிறப்பு பொறுப்பாளர் பிலிப் ஆல்ஸ்டன் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இலங்கை அரசின் மனித உரிமை துறை அமைச்சர் ரஜிவா விஜேசிங்கா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
‘ஃபொன்சேகா தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தான் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஃபொன்சேகா மறுநாளே தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்துவிட்டார். எனவே, அந்த கடிதத்தின் அடிப்படையும் திரும்பப்பெற வேண்டிய ஒன்றுதான். இதை குறிப்பிட்டும் நான் பிலிப் ஆல்ஸ்டனுக்கு பதில் கடிதம் எழுதிவிட்டேன்’ என்றார்.