Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சரணடந்தவர்களைக் கொலைசெய்த குற்றம் குறித்து : பொன்சேகா சிறைத் தண்டனை வழங்க முடியும்

Sarath & mahinthaஅரசாங்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என அரச சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க ரகசிய சட்ட மூலத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச் செயலுக்காக ஜெனரல் பொன்சேகாவிற்கு 14 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட போர் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றின் காரணமாக சர்வதேச யுத்த நீதிமன்றில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என மற்றுமோரு அரச சட்டத்தரணி கொமின் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version