Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சமூக வலைத் தளங்களைத் தடைசெய்தால் வீட்டில் புரட்சி ஏற்படும் : மகிந்த

rajapaksa-twitter-inioruதமது ட்விட்டர் பக்கமான “@PresRajapaksa”வில் இன்று இளைஞர்களின் கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்சே பதில் அளித்தார்.
சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ராஜபக்சேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன்’ என்றார்.
அத்துடன், ‘இந்த சமூக வலைத்தளங்களை நான் தடை செய்தால் வீட்டில் எனது மகன்களிடமிருந்தே நான் ஒரு புரட்சியை எதிர்நோக்க நேரிடும்’ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களது அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
Pd. @prabudeepan: போரினால் பாதிக்கப்பட வடக்கு கிழக்கு வாழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்? ‏
@PresRajapaksa: இந்த இளைஞர்களிடம் இருந்து பயங்கரவாதம் அகற்றப்பட்டுவிட்டது. அவர்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
இனப்படுகொலை நடத்தினால் ஏனைய மதங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ராஜபக்ச வீட்டிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் புரட்சி வராது பால்சோறு வழங்கப்படும் என அவதானிகள் தெரிவித்தனர்.

Exit mobile version